தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Jun 2022 11:44 PM IST (Updated: 8 Jun 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பாதியில் நிற்கும் சுகாதார வளாக பணி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி கவுண்டன் புதூர் செல்லும் பிரிவு சாலை அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்படாமல் பாதியிலேயே நிற்கிறது. பணி நின்று பல ஆண்டுகள் ஆனதால் சுகாதார வளாகம் முழுவதும் பல்வேறு வகையான செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அப்பகுதி பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதிய சுகாதார வளாகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அசோகன், பெரியார் நகர், கரூர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், உப்புப்பாளையத்தில் இருந்து தனியார் கல்லூரி வழியாக புன்னம்சத்திரம் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இந்த வழியாக கல்லூரி வாகனங்கள் மற்றும் லாரிகள், கார்கள், வேன்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சிதிலமடைந்த தார் சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, உப்புப்பாளையம், கரூர்.


Next Story