தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரியலூர்
கழிவு பொருட்களால் சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைகல மாத சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள், கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இதில் மழைநீர் தேங்கி அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஏலாக்குறிச்சி, அரியலூர்.
Related Tags :
Next Story