தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாநகராட்சி, பாத்திமாபுரம் 1-ல் இருந்து 6-வது தெருவரை புதியதாக கொடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பில் கடந்த ஓராண்டாக குடிநீர் திறந்து விடப்படுகிறது. இதில் பாதி வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹ்மான், பாத்திமாபுரம், திருச்சி.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள மசூதி அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி ஜங்ஷனில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராம்குமார், திருச்சி.
பெரிய அளவில் திருட்டு நடக்க வாய்ப்பு
திருச்சி சவேரியார் கோவில் தெரு 52-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக சாலையோரத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கன்வாடி அருகே அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் எரியாத காரணத்தால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பெரிய அளவில் திருட்டு நடைபெறும் முன் இது குறித்து மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சவேரியார் கோவில் தெரு, திருச்சி.