தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளத்தை தூர்வார கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மூட்டாம்பட்டி ஊராட்சி சம்பாகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தில் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். தூர்வாரப்பட்டால் மழை காலங்களில் குளத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மூட்டாம்பட்டி, புதுக்கோட்டை.
குரங்குகளால் தொல்லை
புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு அவ்வழியாக செல்லும் குழந்தைகளை கடிக்க வருவது போல் அச்சுறுத்துகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், காய்கறிகள், உணவு பொருட்களை எடுத்துச் செல்வதுடன், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கீழே தள்ளி விட்டு சென்று விடுகிறது. மேலும் வீட்டு தோட்டங்களில் நடப்பட்டுள்ள பூச்செடிகள், பழவகை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மார்ஸ் ராஜா, புதுக்கோட்டை.