தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தார் சாலை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூரில் இருந்து ஒரம்புப்பாளையம் செல்லும் மண் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே மண்சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கதிர்வேல், கவுண்டன்புதூர், கரூர்.

அரசு டவுன் பஸ்களால் பெண்கள் அவதி

பரமத்தி வேலூரில் இருந்து ஒரத்தை, ஆத்தூர் வழியாக கரூர் செல்லும் டவுன் பஸ்சில் ஒரு நபர்கள் கூட இல்லாத நிலையில் நான்கு பெண்கள் பஸ்சை நிறுத்தியும் நிற்க்காமல் சென்றனர். பெண்களிடம் பயண சீட்டுக்கு பணம் வசூல் செய்ய முடியாததால் இது போன்று செயல்களில் அரசு டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் செயல்படுகின்றனர். எனவே கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அரசு டவுன் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மகேஸ்வரி, தவுட்டுப்பாளையம், கரூர்.


Next Story