தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

வீணாகும் குடிநீர்

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் மெயின் ரோட்டின் ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் குடிநீரானது சாலையில் குளம்போல் தேங்குவதினால் சாலையில் பள்ளம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தங்கேஸ்வரி நகர், திருச்சி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சமீப காலமாக இப்பகுதியில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள வளைவில் விபத்துப்பகுதி என அறிவிப்பு பலகை வைப்பதுடன் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திருவேங்கடம், அல்லூர், திருச்சி.

ஆபத்தான மின்கம்பங்கள்

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் தாலுகா, கே.கள்ளுக்குடி தெற்கு மணிகண்டம், பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள 4 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் அந்த இடத்தில் சிறுவர்கள் எப்போதும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். அருகில் பல வீடுகளும் உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணிகண்டம், திருச்சி.


Next Story