தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

விளம்பரங்களை அழிக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மேம்பால பக்கவாட்டு சுவற்றில் தனியார் விளம்பரம் வரையப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராம்குமார், பாடாலூர், பெரம்பலூர்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மது பிரியர்கள் அடிக்கடி மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம், பெரம்பலூர்.


Next Story