தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள வனப் பகுதிக்கு அருகே உள்ள விளைநிலங்களில் ஏராளமான வனவிலங்குகள் வந்து பயிர்களை சேதம் செய்கின்றது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், நாரணமங்கலம், பெரம்பலூர்.
மேற்கூரையில் முளைத்துள்ள அரச மரக்கன்று
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியின் மேற்கூரையில் அரசமரக்கன்று முளைத்துள்ளது. இந்த நிலையில் மரக்கன்று வளர வளர கட்டிடத்தின் உறுதி தன்மை குறைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இந்த பஸ் நிலையம் இடிந்து விழுந்தால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.