தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தினமும் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அதிக அளவு பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் தினமும் லாரிகளும், பஸ்களும் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்-நொய்யல் செல்லும் நெடுஞ்சாலையில் முத்தனூரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. போடப்பட்ட தார் 10 ஆண்டுகள் ஆனதால் தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முனுசாமி, செட்டிதோட்டம் கவுண்டன்புதூர், கரூர்.


Next Story