'தினத்தந்தி' புகார் பெட்டி
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் அச்சங்குட்டம் தெற்கு தெருவில் மின்கம்பத்தில் ஒயர்கள் மிகவும் தாழ்வாக, ஆபத்தான நிலையில் உள்ளதாக வாசகர் சுதன் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சீரமைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கழிவுநீரால் சுகாதாரக்கேடு
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா பல்லிக்கோட்டை கிராம ஊராட்சி நெல்லைத்திருத்து பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
-பால்துரை, நெல்லை.
இருளில் மூழ்கும் பாலம்
அம்பை-கல்லிடைக்குறிச்சி பெரிய ஆற்றுப்பாலம், தாமிரபரணி கரம்பை பகுதியில் உள்ள பாலம் ஆகியவற்றில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்குகிறது. போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த பாலங்களில் மின்விளக்கு வசதி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
குண்டும், குழியுமான ரோடு
நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் மெயின்ரோட்டில் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, களக்காடு.
குறுகலான சாலை
களக்காடு ஒன்றியத்தை சேர்ந்த டோனாவூர் முதல் ஏர்வாடி வரையில் உள்ள சாலை குறுகியதாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. பஸ் சென்றால் எதிரே வாகனங்கள் வர முடியவில்லை. எனவே, இந்த சாலையை சரி செய்ய வேண்டும்.
-குணசேகர், டோனாவூர்.
எரியாத தெருவிளக்குகள்
நெல்லை சீவலப்பேரி ரோடு கிருபாநகர் பிள்ளையார் கோவில் அருகில் தெருவிளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் இரவுநேரங்களில் நடமாட முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-இசக்கியம்மாள், கிருபாநகர்.
தாழ்வாக செல்லும் மின் ஒயர்
தென்காசி மாவட்டம் பண்பொழி சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் தெருக்களில் மின்சார ஒயர் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. எனவே, மின் ஒயர்களை உயர்த்தி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மீரான், பண்பொழி.
சாலையை சீரமைக்க வேண்டும்
பொட்டல்புதூர் பஸ் நிலையம் முதல் திருமலையப்பபுரம் பஸ் நிலையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ஹமீது, பொட்டல்புதூர்.
சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் ஓடை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி தெரு, மீன்சந்தை பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் ஓடை சுத்தம் செய்யப்படாமல் மிகவும் அசுத்தமாக உள்ளது. கடந்த 2 மாதங்களாகவே இவ்வாறு இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, இதை சீரமைக்க வேண்டுகிறேன்.
-கார்த்திக், சாத்தான்குளம்.