தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு புதுப்படிசந்து, மூக்கப்பிள்ளை சந்து இவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இவை கூட்டமாக ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி.

நிறுத்தப்பட்ட மினி பஸ் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் கிராமம் கூடலூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4:20 மணி அளவில் தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த மினிபஸ் கொரோனா தொற்று காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகியும் இந்த மினி பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கூடலூர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சுக்காம்பட்டியில் இருந்து மூவானூர் செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிரசாத், சுக்காம்பட்டி, திருச்சி.


Next Story