தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குளம் தூர்வாரப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், காட்டகரம் வீரபோகம் கிராமத்தில் ஓமகுளம் உள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் தாமரை செடிகள் முளைத்து தற்போது அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் அசுத்தமாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காட்டகரம் வீரபோகம், அரியலூர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகரம் ஜெயங்கொண்டம்-கொம்மேடு செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனால் அடிக்கடி லாரிகள் கரும்பு மற்றும் தைல, சவுக்கு மரம் பாரம் ஏற்றி செல்லும்போது மின்சார கம்பிகள் சிக்கிக்கொள்கிறது. இதனால் மின்சாரம் தடைப்படுகிறது. எனவே பெரும் அளவில் விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.


Next Story