தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான ரேஷன் கடை

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் அருகே உள்ள உடையாளிப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் பயன்அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயபால், உடையாளிப்பட்டி, புதுக்கோட்டை.


Next Story