தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

ஆக்கிரமிப்பில் சிக்கிய பழமையான குளம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தில் உள்ள வளத்தான் குளம் சுமார் 100 தலைமுறைகளாக உள்ளது. தற்போது இந்த குளத்து கரையில் அந்த பகுதி மக்கள் சிலர் அடுக்குமாடி வீடுகட்டி கழிவுநீரை இந்த குளத்தில் கலக்கிவிடுகிறார்கள். இதனால் இந்த குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் முளைத்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி குளத்தில் மழைநீரை சேகரித்து இப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.


Next Story