தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

கழிவுநீர் வாய்க்காலில் குடிநீர் பிடிக்கும் அவலம்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் இறக்கம் லெப்பை சாய்யு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயானது கழிவுநீர் வாய்க்காலில் குடத்தை வைத்து பிடிக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குடிநீர் குழாய்க்கு மூடி வசதி இல்லாததால் எப்போதும் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணிவேல், பள்ளப்பட்டி, கரூர்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் சாலையில் உள்ள செக்குமேடு பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செக்குமேடு, கரூர்.


Next Story