தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருபைஞ்சீலி கிராமத்தில் இருந்து துடையூர் செல்லும் சாலையில் ஈச்சம்பட்டி கிராமத்தில் இருக்கும் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஈச்சம்பட்டி, திருச்சி.

நோய் பரவும் அபாயம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடம் சரியான முறையில் பராமரிப்பு இன்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஏராளமானவர்கள் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

புதர்மண்டி காணப்படும் அலுவலக வளாகங்கள்

திருச்சி கண்டோன்மெண்ட் ஹீபர் ரோட்டின் நீதிமன்றத்தின் அருகாமையில் செயல்பட்டுவரும் தீயணைப்பு துறை மற்றும் பத்திரப்பதிவு துறை ஆகிய அலுவலக வளாகங்கள் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாடவும், இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கண்டோன்மெண்ட், திருச்சி.

தெருநாய்களால் தொல்லை

திருச்சி கூனிபஜார் சவேரியார் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம், கூட்டமாக நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதுடன் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்களையும் கடிக்க துரத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இளையராஜா, கூனிபஜார், திருச்சி.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

திருச்சி 13-வது வார்டு வடக்கு ஆண்டார் வீதி, புதுப்படி சந்தின் உள்ளே, சந்தின் இரு பக்கமும் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி.


Next Story