தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையில் பள்ளம்

பெரம்பலூர் நகர பகுதியில் துறையூர் செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை சரிசெய்யும் வகையில், சாலையின் நடுவே மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி அமைக்கப்பட்டுள்ள இடம் பள்ளமாக உள்ளதால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரோஜா, பெரம்பலூர்.


Next Story