தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கரூர்
குடிநீர் குழாய்களில் உடைப்பு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் காவிரி ஆற்றில் பெரிய அளவில் கிணறு அமைத்து அதன் மூலம் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வேட்டமங்கலத்தில் இருந்து குந்தாணிபாளையம், நத்தமேட்டிற்கு செல்லும் வழியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. அதேபோல் நத்தமேடு பகுதியில், மேலும் ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேட்டமங்கலம், கரூர்.
Related Tags :
Next Story