தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த மின்கம்பம் பலத்த காற்று அடிக்கும்போது ஆடுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் பழுதடையும் அபாய நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தொப்பம்பட்டி, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம், ஸ்ரீரங்கம் பஸ்கள் செல்லும் எம்.சி.டொனால்ட் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜ், திருச்சி.


Next Story