'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாய் உடைப்பு

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகைக்கடையின் முன்பு மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 வாரங்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அங்கு தண்ணீர் தேங்கி கொசுக்கள் மொய்ப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.

செந்தூர் நாதன், பாளையங்கோட்டை.

சிதிலமடைந்த சமுதாய நலக்கூடம்

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா அழகியபாண்டியபுரம் கிராமம் முருகன் கோவில் அருகே அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக கிடக்கிறது. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியன், அழகியபாண்டியபுரம்.

தெருவிளக்கு எரியவில்லை

நெல்லை பழைய பேட்டையில் சா்தார்புரத்தை அடுத்துள்ள அமராவதிநகரில் கடந்த 2 வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே, ெதருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணபதி ஆறுமுகம், பழையபேட்டை.

வாறுகால் பாலம் சரிசெய்யப்படுமா?

முக்கூடல் சொக்கலால் தெருவில் கழிவுநீர் வாறுகால் பாலம் உடைந்துள்ளது. இதனால் முதியவர்கள், சிறியவர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆதிமூலம், முக்கூடல்.

வழிகாட்டி பலகை அவசியம்

ராதாபுரம் தாலுகா ஊரல்வாய்மொழிக்கு கீழ்புறம் ராதாபுரம், இருக்கன்துறை ரோடு இணையும் இடத்தில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால் அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், சாலைகள் எங்கே செல்கின்றன? என வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, குறிப்பிட்ட இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் 2 வேகத்தடைகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

ஆபத்தான நிலையில் தொங்கும் மரக்கிளை

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் முதலியார்பட்டி காந்திநகர் பகுதி 3-வது தெரு நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் மருதமரம் உள்ளது. அந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக முறிந்து சாலையின் நடுவே அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியாக சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் முறிந்த கிளை விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கும் மரக்கிளையை உடனே வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுககொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு சாலையில் வாறுகால் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுத்து நிறுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், கோவில்பட்டி.

மின்விளக்கு வசதி

கோவில்பட்டி நகராட்சி 14-வது வார்டு ஏசுவடியான் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மின்கம்பங்கள் மட்டும் உள்ளது. ஆனால், மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. எனவே, மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மெர்சி மகநே்திரன், கோவில்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் வங்கியின் அருகே அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அருகே குடியிருப்புகள், மருத்துவமனை, ஆலயம் அமைந்திருப்பதால் ஆபத்தான மின்கம்பத்தை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமன், புதுக்கோட்டை.


Next Story