தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் நகரான குளித்தலையின் சுற்றுவட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட தோட்டங்களிலும், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கூரை வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் திடீரென தீ விபத்து ஏற்படும் போது, திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் தீயை அணைக்க, திருச்சி மாவட்டம், முசிறி தீயணைப்பு துறையினரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுந்தர், குளித்தலை.
பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஆலமரத்துமேடு நூலகம் அருகில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. விவசாயிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் இந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழரசன், ஆலமரத்துமேடு.
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழியில் பஸ் நிலையம் அருகே வளைவான பகுதி உள்ளது. இச்சாலை வழியாக வேகமாகவரும் வாகனங்கள் இந்த வளைவு பகுதியில் வரும் போது விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியின் எதிரொலியாக பஸ் நிலையம் அருகே உள்ள வளைவான பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடை அமைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க காரணமான தினத்தந்தி புகார் பெட்டிக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் நகரான குளித்தலையின் சுற்றுவட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட தோட்டங்களிலும், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கூரை வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் திடீரென தீ விபத்து ஏற்படும் போது, திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் தீயை அணைக்க, திருச்சி மாவட்டம், முசிறி தீயணைப்பு துறையினரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுந்தர், குளித்தலை.
குண்டும், குழியுமான சாலை
கரூர் திண்ணப்பா தியேட்டரில் இருந்து செங்குந்தபுரம் செல்லும் பிரதான சாலை நீண்ட நாட்களாகவே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். ஒருசில நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.