தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

விபத்து ஏற்படும் அபாயம்

திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. அந்த மூடியின் பக்கவாட்டில் இருந்து கம்பி ஒன்று வெளிவந்து நீட்டிக்கொண்டு இருக்கிறது. சாலையில் செல்பவர்கள் இந்த கம்பியில் கால் பட்டு தடுக்கி விழுகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்மலைப்பட்டி.

தூர்ந்துபோகும் கழிவுநீர் வாய்க்கால்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், மலைக்கோவில் தெற்கு பகுதியில் உள்ள மேரிஸ்நகர், தென்றல் நகர் பகுதிகளில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலில் செடி-கொடிகள் முளைத்தும், குப்பைகள் கொட்டப்பட்டு தூர்ந்துபோன நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மலைக்கோவில்.

சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் தேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம்பட்டி ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டுசெல்வதற்கு சரியான பாதைவசதியோ, சாலை வசதியோ கிடையாது. மேலும் ஈமசடங்குகள் செய்ய தண்ணீர் மற்றும் மின்சார வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே‌ சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ராஜமாணிக்கம், ஆவாரம்பட்டி.

சீரமைக்கப்படாத சுரங்கப்பாதை

திருச்சி மாவட்டம், லால்குடி ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் பயணிகள் வசதிக்காக லால்குடி மக்கள் கடந்து செல்ல மேம்பாலத்திற்கு கீழ் சுரங்க பாதை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சுரங்க பாதையில் தண்ணீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த பாதை வழியாக மக்கள் செல்ல இயலவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆசைத்தம்பி, லால்குடி.

விபத்து ஏற்படும் அபாயம்

திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. அந்த மூடியின் பக்கவாட்டில் இருந்து கம்பி ஒன்று வெளிவந்து நீட்டிக்கொண்டு இருக்கிறது. சாலையில் செல்பவர்கள் இந்த கம்பியில் கால் பட்டு தடுக்கி விழுகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்மலைப்பட்டி.Next Story