தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Aug 2022 11:59 PM IST (Updated: 12 Aug 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான அங்கன்வாடி மைய கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கே.புதுப்பட்டி கடை வீதியில் உள்ள போலீஸ் நிலையத்தை அடுத்து முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப்பள்ளி மிகவும் பாழடைத்ததால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மோசமான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் குழந்தைகள் இருக்கும்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.புதுப்பட்டி.

திறந்து கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதிகளில் காவிரி மேல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி தண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த காவிரி தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீர் வெளியேற்ற தொட்டிகள் திறந்த வெளியில் இருப்பதினால் அவற்றில் ஆடு, மாடுகள், நாய்கள், குரங்குகள் தண்ணீர் குடித்தும், குளித்தும் அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் குடிநீர் மாசு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

சாலையோரம் சாய்க்கப்படும் குப்பை தொட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஆங்காங்கே, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் சாலையோரமாக சாய்க்கப்பட்டும் பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

திறக்கப்படாத பொதுவினியோக கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை ஊராட்சியில் கடந்த 2017-18-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது வினியோக கட்டிடம் பணிகள் முடிவடைந்தும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்த புதிய கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மஞ்சப்பேட்டை.

பயனற்ற பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி விளக்கு சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையானது உயர்த்தப்பட்டதால் இந்த பயணிகள் நிழற்குடை பள்ளத்திற்கு சென்றதால், தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.


Next Story