தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்களில் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை கடிக்க பாய்கிறது. மேலும், வாகனங்களில் செல்வோரை பின்னால் சென்று துரத்துகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
கழிவறை கட்டப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடைக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்குகம் எந்த கழிவறை வசதியும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி ரேஷன் கடை பகுதியில் கழிவறை கட்டிட தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், தட்சிணாபுரம் கிராமத்தில் உள்ள தெற்கு புறத்தில் இருந்து வேங்கட்குளம் விளக்கு வரை செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்வே சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தட்சிணாபுரம்.
பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் பெயர்ந்தும், சுவர்கள் பழுந்தடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மட்டங்கால்.
கால்நடை மருத்துவமனை வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், இடையம்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீடுகளில் அதிக அளவில் ஆடு, மாடு,கோழிகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாடு, ஆடு, கோழிகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் மேலத்தானியத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க பொதுமக்கள், சமுக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மேலதானியம்.