தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குடிநீர் பற்றாக்குறை

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் , எம். களத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் இரண்டு மாதம் காலமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் வந்தாலும் சாக்கடை கலந்து அசுத்தமாக வருகிறது. இதனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள். மேய்க்கல் நாயக்கன் பட்டி.

மின் ஒயர்களை மாற்ற கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி கிராமம், காட்டுப்பட்டி காமராஜர் நகர் முதல் குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் செல்லும் மின்சாரம் ஒயர் சிங்கில் பீஸ் ஆக செல்வதால் வீட்டில் இருக்கும் மிக்சி, கிரைண்டர், மின் மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. மேலும் மழைக்காலங்களிலும் அடிக்கடி மின் ஒயர் அறுந்து விடுகிறது, எனவே மின் ஒயரை மாற்றி மின் கம்பியாகவும், சிங்கிள் பீசை இரண்டு பீசாகவும் மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்டிகை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காட்டுப்பட்டி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூர் கிராமத்தில் அரசு நிலைப்பாளையம் கிராமத்தில் அ/மி சேப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலுக்கு செல்லும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் கோவில் திருப்பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராமசாமி, அணியாப்பூர்.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சரிசெய்ய கோரிக்கை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை அருகே உள்ள தலைமலையில் சஞ்சிவிராய பெருமாள் உள்ளது. இந்த மலை கோவிலில் 5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பாதை குறுகலாக கரடு, முரடாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்து தினமும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் கீழ்மலை அடிவாரத்தில் இருந்து மேல்மலை அடிவாரம் வரை தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தா.பேட்டை.

புதிய அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் எப்போது வேண்டுமானும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி துணை சுகாதார நிலையத்தை இடித்து புதிதாக கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கார்த்திக், கீழக்குன்னுப்பட்டி.


Next Story