தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வாகன நிறுத்தம் வேண்டும்

பெரம்பலூரில் புதிய மற்றும் பஸ் நிலையங்கள் தனித்தனியாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு வந்து பின்னர் பஸ்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் (பார்க்கிங்) வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பன்றிகளால் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சாலையில் போடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறைமங்கலம்

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி முதல் பனங்கூர் வரை தார்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராயப்பன் , பேரளி.

வடிகால் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வடிகால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வடிகால் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வருகின்றன. இதனால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமகக்ள், மருவத்தூர்


Next Story