'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

அடிக்கடி மின்வெட்டு

விருதுநகர் மாவட்டம் பாவாலி ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்நகர், கலைஞர் நகர் பகுதியில் கடந்த சிலநாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் ஏற்படும் மின்வெட்டை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

விவசாயிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் கே.புதுப்பட்டி-கரிசல்பட்டி சாலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க நகர மார்க்கெட்களுக்கு தினமும் கொண்டு செல்வா். இந்நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களின் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் 85-வது வார்டு புதுமகாளிபட்டியில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனஓட்டிகள் இதில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் இந்த சாலையில் தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இப்பகுதி சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகள் சிரமம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் கான்கிரீட் சுவரின் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்ந்து விழும் சிமெண்டு கான்கிரீட் பூச்சுகளை சரி செய்ய வேண்டும்.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மாரியம்மன் கோவில் மேற்குதெரு பகுதியில் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு காலையிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் மின்கட்டண சுமை ஏற்படுவதுடன் மின்சாரம் வீணாகும் நிலையும் நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள உயர்கோபுர விளக்குகள் சரியான நேரங்களில் எரிவதை கவனிக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி பஞ்சாயத்து தொழிற்ேபட்டை நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இ்ல்லை. இதனால் கழிவுநீரானது சாலையில் தேங்கி அப்பகுதியின் சுகாதாரத்தை பாதிக்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தி கால்வாய வசதியை ஏற்படுத்த வேண்டும்.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. காலையில் கூட்டமாக சுற்றித்திரியும் இவை தெருக்களில் செல்வோரை அச்சப்படுத்தும் வகையில் சுற்றிக்ெகாண்டு குரைக்கிறது. மேலும் இரவில் வாகனஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சாலையில் நடமாட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஒளிராத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஓன்றியம் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்குளம் 9-வது வார்டு பகுதியில் கடந்த சிலநாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் இந்த சாலையை பயன்படுத்த வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தினமும் இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை மாற்றவேண்டும்.

சாலை சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மேல்நிலை நீர்தேக்க ெதாட்டியானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைந்துள்ள சாலையில் இருந்து கழனிவாசலுக்கு செல்லும் தார்ச்சாலையானது முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகள் நடக்கிறது. இப்பகுதி தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.

தர்மர், காரைக்குடி.


Related Tags :
Next Story