"தினத்தந்தி" செய்தி எதிரொலி:தென்திருப்பேரை- குரங்கணி சாலை சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி:தென்திருப்பேரை- குரங்கணி சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக தென்திருப்பேரை- குரங்கணி சாலை சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காட்சியளித்தது. இதனால் பாதசாரிகள் மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுதொடர்பாக "தினத்தந்தி"யில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து புதிதாக அந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் அந்த சாலையில் உள்ள பள்ளிக்கூடங்கள் அருகேயும் மற்றும் ஆபத்தான வளைவுகளிலும் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டு ,அதன் மீது வெள்ளைக் கோடுகளும் வரையப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story