'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
'தினத்தந்தி'க்கு நன்றி
திண்டுக்கல் அனுமந்தநகர் 7-வது தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சாக்கடை கால்வாய், சாலை வசதி செய்து தரவேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சாக்கடை கால்வாய், சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதையொட்டி தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-பாரத், அனுமந்தநகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அம்பாத்துரையில் இருந்து சின்னாளப்பட்டி செல்லும் வழியில் அங்கன்வாடி மையம் அருகே சாலை ஓரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, பகலிலேயே கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
-ஸ்ரீதர், அம்பாத்துரை.
சேதமடைந்த சாலை
தேனியில் பெரியகுளம் சாலையில் இருந்து எடமால் தெருவுக்கு திரும்பும் இடத்தில் சாலை சேதம் அடைந்து இருக்கிறது. அங்கு பதிக்கப்பட்டு இருந்த பேவர்பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயும் சேதம் அடைந்துள்ளது. எனவே சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும்.
-கதிரவன், தேனி.
பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு
திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் பழனி பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லை. மேலும் பஸ்களை நிறுத்துவதற்கும் இடையூறாக இருக்கிறது. எனவே பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
-ராஜேஷ், திண்டுக்கல்.