தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பிய புகார்கள்.

கன்னியாகுமரி

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்வதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரிகரன், வடிவீஸ்வரம்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மாரிநெடுந்தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், மாரிநெடுந்தெரு.

எரியாத விளக்குகள்

தெரிசனங்கோப்பு பகுதியில் இருந்து தெள்ளாந்தி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சுடுகாடு பகுதியில் 3 மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், தெரிசனங்கோப்பு.

சீரமைக்க வேண்டும்

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கோட்டில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குழாய் பதிக்கப்பட்டு சீரமைப்பு பணிக்காக ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால், 2 மாதங்கள் ஆகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கா.வினுகுமார், மார்த்தாண்டம்.

சேதமடைந்த மின்கம்பம்

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட மேலச்சந்தையடியில் இருந்து காட்டுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வளைவு பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சுயம்புலிங்கம், வெள்ளையந்தோப்பு.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் கோட்டார் சவோரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. ஆனால், சாலையில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் விளக்குள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், டி.வி.டி. காலனி.


Next Story