தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 08888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருப்பத்தூர்

சாலையை சீர் செய்வார்களா?


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள கருமாரியம்மன் கூட்டுச்சாலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. அந்த இடத்தில் பள்ளம் ேதாண்டி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். ஆனால் அந்த பள்ளத்தை சரியாக சீரமைக்கவில்லை. சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா?

-தாமோதரன், சோளிங்கர்.

மின்சார வசதி செய்ய வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டி 3 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை மின்சார வசதி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மின் விசிறி பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே உடனடியாக பள்ளிக்கு மின்சார வசதி செய்ய வேண்டும்.

-சுதாகர், கூத்தம்பாக்கம்.

திறக்கப்படாத மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்



திருவலம் பேரூராட்சி 5-வது வார்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. அந்தக் கட்டிடத்தை அதிகாரிகள் இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். மதுபிரியர்கள் இரவில் அங்கு வந்து மதுபானத்தைக் குடித்து விட்டு அட்டகாசம் செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தைத் திறந்து வைக்க ேவண்டும்.

-ராஜேந்திரன், திருவலம்.

கால்வாயையொட்டி பள்ளம்



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட புதுக்காமூர் சாலையில் நகர்ப்புற விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பக்க கால்வாய்கள் கட்டப்பட்டது. சாலை தார் சாலையாகப் புதிதாக போடப்பட்டது. பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் பக்க கால்வாயையொட்டி மண் போட்டுப் மூடாமல் உள்ளதால் சாலையோரம் செல்லக்கூடிய கால்நடைகள், சிறுவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். நகராட்சி நிர்வாகம் அந்தப் பணியை நிறைவு செய்ய வேண்டும்.

-ராகவன், ஆரணி.

தபால் அலுவலகத்தை தரைதளத்தில் அமைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் உள்ள தபால் அலுவலகம் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு சேமிப்பு டெபாசிட் செய்வதற்கும், ஓய்வூதியம் வாங்குவதற்கும் செல்ல சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப தபால் அலுவலகத்தை வேறொரு கட்டிடத்தில் தரை தளத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஜெயபால், ஆலங்காயம்.

சாலை பணியை தொடங்குவார்களா?


சோளிங்கர் தாலுகா பாணாவரத்தில் போலீஸ் லைன் தெரு சாலையை சீர் செய்ய எம் சாண்ட் மற்றும் மணல், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அவைகள் கொட்டி பல மாதங்கள் ஆகி விட்டது. ஆனால், அங்குப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தெரு சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுரேஷ், பாணாவரம்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் மத்திய பகுதியாக நான்கு கம்பம் சந்திப்பு உள்ளது. அங்கு உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, கடந்த சில மாதங்களாக எரியவில்லை. அங்கு அதிகமான வாகன போக்குவரத்து, அதிக மக்கள் கூடும் பகுதியாகும். அங்குள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உயர்கோபுர மின்விளக்குகளை அதிகாரிகள் எரியவிட ேவண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.



Next Story