'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சாக்கடை கால்வாய் தேவை
திண்டுக்கல் புவனேஸ்வரி அம்மன்நகரில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
சாலையின் நடுவே பள்ளம்
பழனி நால்ரோடு பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் உருவாகிவிட்டது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தை மூட வேண்டும்.
-கார்த்திக்ராஜா, பழனி.
குப்பை குவியல்
கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் தெருவோரத்தில் குப்பைகளும், கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, அப்பிபட்டி.
போலீஸ் ரோந்து அவசியம்
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் விடிய, விடிய பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அதை பயன்படுத்தி திருடர்கள் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பதோடு, திருட்டிலும் ஈடுபடுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதற்கு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஸ்வரி, பாலகிருஷ்ணாபுரம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓவுலாபுரம் 1-வது வார்டு ஆதிதிராவிடர் குடியிருப்பில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மருதுடையார், சின்னஓவுலாபுரம்.
கூடுதல் பஸ்கள் தேவை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்நிலையத்துக்கு ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-மகேஸ்வரி, திண்டுக்கல்.
======
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.