தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர் அனுப்பிய புகார்கள்.

கன்னியாகுமரி

சுகாதார சீர்கேடு

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சார் பதிவாளர் சாலையோரமும், அண்ணாவிகுளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயோரமும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்றுவதற்கும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

நடை பாதை தேவை

மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் கருங்கல் செல்லும் சாலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால், பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, சாைலயின் இருபுறமும் நடைபாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டல் வினு, காப்புக்காடு.

போக்குவரத்துக்கு இடையூறு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தோட்டியோட்டில் இருந்து வில்லுக்குறி வரை சாலையோர பகுதியை ஆக்கிரமித்து நடைபாதையில் கடைகள் அமைத்து வருகிறார்கள். இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பெரிய வாகனங்கள் வரும் போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், வில்லுக்குறி.

காத்திருக்கும் ஆபத்து

நாகர்கோவில், நேசமணிநகரில் இருந்து நெசவாளர்காலனி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். இந்த சாலையின் தொடக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியின் மேல் சிமெண்ட் சிலாப் போட்டு மூடியுள்ளனர். தற்போது இந்த மூடி சேதமடைந்து, கம்பிகள் வெளிேய தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக ெசல்கிறவர்கள் உடைந்த சிலாப்பின் மீது கால் வைத்தால், தவறி பாதாளசாக்கடை குழியில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

போக்குவரத்து நெரிசல்

கோணத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்கள் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்கு அருகே நின்று பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றி செல்கிறது. அப்போது பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே அரசு பஸ்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

-எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.

குடிநீர் இல்லை

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் நவீன முறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போது செயல்படாமல் குடிநீர் நல்லிகள் இன்றி காணப்படுகிறது. இதனால், தாகத்துடன் ஓடி வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி ெசல்கிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் நல்லிகள் அமைத்து குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-உதயகுமார், கன்னியாகுமரி.


Next Story