'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

பழுதான ரோடு

கோபியிலிருந்து பாரியூர், அத்தாணி செல்லும் ரோட்டில் நஞ்சகவுண்டனூரில் ரோடு பழுதாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நஞ்சகவுண்டனூர் ரோட்டை சரிசெய்யவேண்டும்.

விஸ்வம், கோபி,

தேங்கி கிடக்கும் குப்பை

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் வெள்ளாளபாளையம் பிரிவு எதிரில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ளிச்செல்ல ஆவன செய்வார்களா?

நாதன், கோபி.

உடைந்த நடைமேடை

ஈரோடு ஸ்டோனி பாலம் நடை மேடை உடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த நடைமேடையை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.


வீணாகும் குடிநீர்

கொடுமுடி-கரூர் நெடுஞ்சாலையில் சோளக்காளிபாளையம் பனங்காட்டூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. உடனே குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோளக்காளிபாளையம்

ரோட்டை சீரமைக்க வேண்டும்

ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

ஆபத்தான குழி

ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் உள்ள ரோட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழியை தோண்டிவிட்டு அரைகுறையாக மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். இதனால் அந்த இடத்தில் குழி ஏற்பட்டுள்ளது. இந்த இடம் அடிக்கடி வாகனங்கள் வந்து திரும்பி செல்லும் இடம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனே அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு




Related Tags :
Next Story