தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய குறைகள் விவரம் வருமாறு.

கன்னியாகுமரி

மீட்டர் பெட்டி சீரமைக்கப்பட்டது

ஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் சாலையில் பழைய ஆயில் சொசைட்டி எதிரில் உள்ள மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த 31-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மீட்டர் பெட்டி பொருத்தினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாய்ந்து நிற்கும் மின்கம்பம்

மேலசங்கரன்குழி ஊராட்சியில் பாம்பன்விளையில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கிறது. பெரும் காற்று மழைக்காலங்களில் இந்த மின்கம்பம் கீழே விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நிஷாந்,

பாம்பன்விளை.

மின்தடையால் பொதுமக்கள் அவதி

மயிலாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால், வேலைக்கு செல்கிறவர்கள், சுய தொழில் செய்கிறவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தடையில்லா மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், மயிலாடி.

சீரமைக்க வேண்டிய சாலை

குழித்துறை நகராட்சியில் சாத்தச்சிவிளை பகுதியில் சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது. தற்போது குடிநீர் திட்ட பணிக்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. அதன்பின்பு அந்த பள்ளத்தில் சரியாக மூடவில்லை. இதனால், சாைல சேதமடைந்து குண்டும் குழியுமாக தோன்றி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் மாறி வருகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், சாத்தச்சிவிளை.

சாலை சீரமைக்கப்படுமா?

ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைகாலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் ெசல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார்,

ராஜாக்கமங்கலம்.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மாநகராட்சியில் 42-வது வார்டு இருளப்பபுரம் கிருஷ்ணாசாலை வழியாக வேதநகர் செல்லும் திருப்பத்தில் சாலையோரம் குப்பைகள் ெகாட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.


Next Story