'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

தெருநாய்கள் தொல்லை

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவே அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அழகுசுந்தரம், பழனி.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

உத்தமபாளையம் தாலுகா கம்பம் புதுப்பட்டி இந்திரா காலனியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருணாநிதி, கம்பம் புதுப்பட்டி.

பழுதடைந்த தெருவிளக்குகள்

ஆத்தூர் தாலுகா பிரவான்பட்டி 6-வது வார்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவிளக்குகள் பழுதடைந்தன. தற்போது வரை அது சரிசெய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

செம்பட்டி காந்திஜிநகரில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பிரகதீஷ்வரன், செம்பட்டி.


Next Story