'தினத்தந்தி' செய்தி எதிரொலி: குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலி: குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

ஈரோடு

ஈரோடு 8-வது வார்டுக்குட்பட்டது பெரியசேமூர் பகுதி. இங்கு உள்ள முதலியார் தோட்டம் எல்.வி.ஆர். காலனியில் சாலையோரம் குப்பைகள் மூட்டை, மூட்டையாக மலைபோல் குவிந்து கிடந்தன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே குப்பைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி நேற்று 'தினத்தந்தி'யில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் எல்.வி.ஆர். காலனி பகுதிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். பின்னர் அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் அள்ளப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன.

இதனால் பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.


Next Story