தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

ராணிப்பேட்டை


சுகாதார வளாகத்தில் அதிக கட்டணம் வசூல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ெரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கட்டண கழிவறைகளை பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் ரூ.5, ரூ.10 எனக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் கொடுக்க சென்றால் அவருக்கு தமிழே தெரியவில்லை. எனவே சுகாதார வளாகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.

-ராஜேஷ், அரக்கோணம்.

செடி, கொடிகளால் சாலையில் இடையூறு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக அம்மனூர் செல்லும் சாலையில் இருபுறமும் முள்செடி கொடிகள் முட்புதர்கள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளதால் இடையூறாக உள்ளது. அந்த வழியாக எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கக்கூடிய முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-சிவச்சந்திரன், கரியமங்கலம்.

மின்பெட்டிக்கு பூட்டுப்போட வேண்டும்

வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உயர் மின் கோபுரத்தின் கீழ்பகுதியில் மின் விளக்கு எரிய வைப்பதற்கான மின்சார வினியோக பெட்டி உள்ளது. அந்த மின் பெட்டி எப்போதும் திறந்த நிலையில் ஆபத்தாக இருக்கிறது. ஒரு சில நேரங்களில் மட்டும் அந்தப் பெட்டியை அடைத்து கயிறு கொண்டு தற்காலிகமாக கட்டி வைக்கின்றனர். மேலும் பொதுமக்கள் பலர் அந்தப் பகுதியில் பஸ் ஏறுவதற்காக நிற்பதால் விபத்து நேரிடும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மின் பெட்டியை அடைத்து பூட்டுப் போட வேண்டும்.

-மலரவன், வேலூர்.

சாலைைய சீர் செய்வார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரின் பிரதான சாலையாக இருப்பது ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் எம்.ஜி.ஆர்.சாலை (70 அடி சாலை) ஆகும். இந்தச் சாலையில் ஆற்காட்டில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், சோளிங்கர், அரக்கோணம், ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய ஊர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அபாயகரமாக உள்ளது. சாலையைச் சீர் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கட்ரமணா, ஆற்காடு.

கிடப்பில் போடப்பட்ட வீடுகள் கட்டும் பணி

தேசூர் அருகே சாத்தபூண்டி கிராமத்தில் இருளர் இன மக்களுக்காக 6 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பணி முடியாமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது கட்டுமான பணியை விரைந்து முடித்து பயனாளிகளிடம் தொகுப்பு வீடுகளை அதிகாரிகள் ஒப்படைப்பார்களா?

-பகலவன், தேசூர்.

தட்டி மறைவில் செயல்படும் மதுபான பார்

ஆரணி புதிய பஸ் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது. சுற்றுச்சுவர் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் முன்பு மூங்கில் தட்டி கட்டிக்கொண்டு சிலர் மதுபான பார் நடத்தி வருகின்றனர். புதிய பஸ் நிலையம் அருகில் ஆரணி டவுன் போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராகவாலாரன்ஸ், ஆரணி.

பாதியிலேயே விடப்பட்ட தார் சாலை பணி

திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்லமுத்துநகர் அருகில் ெசல்வாநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்த நகரில் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக தார் சாலை போடுவதற்காக தார் கலவை கொட்டப்பட்டது. ஆனால் தார் சாலைைய சரியாக போடாமல் பாதியிலேயே விட்டு விட்டனர். எனவே எங்கள் பகுதிக்கு தார் சாலை போட வேண்டும்.

-அண்ணாமலை, வேங்கிக்கால்.


Related Tags :
Next Story