'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை பணி தாமதம்

திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்கு செல்லும் ஜி.டி.என். சாலை இருவழி பாதையாக மாற்றும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதுவரை சாலை பணிகள் முடியவில்லை. அந்த சாலையில் 2 பள்ளிகள் இருக்கின்றன. மேலும் அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

பஸ்சில் இருக்கைகள் சேதம்

திண்டுக்கல்லில் இருந்து அ.வெள்ளோட்டுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் சேதம் அடைந்த இருக்கைகள் உள்ளன. இதனால் அதில் அமர முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். அந்த சேதம் அடைந்த இருக்கைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவசக்தி, அ.வெள்ளோடு.

மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர்

தேனி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அருகில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்திலேயே தொற்றுநோயை பரப்பும் வகையில் கழிவுநீர் தேங்கி நிற்பது வேதனை அளிக்கிறது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், தேனி.

தெருநாய்கள் தொல்லை

பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தனியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணபாரதி, கலிக்கநாயக்கன்பட்டி.

பராமரிப்பு இல்லாத பூங்கா

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சி வெயிலடிச்சான்பட்டியில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் பூங்கா முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பூங்காவில் மர்மநபர்கள் நுழைந்து விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி சாதனங்களை சேதப்படுத்தி விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும்.

-பிரகாஷ், வெயிலடிச்சான்பட்டி


Next Story