தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

ராணிப்பேட்டை


டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரிலும் புன்னையை அடுத்த மேல் களத்தூர் செல்லும் சாலைக்கு மிக அருகிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மது வாங்கி குடிக்கும் மதுபிரியர்கள் காலிப்பாட்டில்களை சாலையில் வீசி செல்வதும், போதையில் நிலை தடுமாறி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமாக உள்ளனர். மதுபான பிரியர்களால் அந்த வழியாக செல்வோர் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேற்கண்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற ேவண்டும்.

-பாண்டிராஜ், நெமிலி.

ரோலரை வேறு இடத்தில் நிறுத்தி வைப்பார்களா?

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தேரடி வீதி தெரு அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் சாலை திருப்பத்தில் 6 மாதமாக ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு ரோலர் இடையூறாக உள்ளது. பலர், அதன் மறைவில் கழிப்பிடம் செல்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ரோடு ரோலரை ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் நிறுத்தி வைப்பார்களா?

-க.முத்து, சமூக ஆர்வலர், போளூர்.

சாலையில் வழிந்ேதாடும் கழிவுநீர்

வேலூர் ரங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ெசங்காநத்தம் செல்லும் வழியில் கால்வாய் கழிவுநீர் சரிவர ஓடாததால் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. கால்வாைய தூர்வாரி கழிவுநீர் முறையாக ஓட நடவடிக்கை எடுப்பார்களா?

அருண்குமார், ரங்காபுரம்.

பழுதான சாலை

பேரணாம்பட்டு 16-வது வார்டு பஜார் வீதி சாலை பழுதடைந்து விட்டது. அந்த வழியாக ஆட்டோ, கார் ஆகியவை செல்ல சிரமமாக உள்ளது. 6 மாதமாக நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சரி செய்து தர வேண்டும்.

-பா.முத்துக்குமார், பேரணாம்பட்டு.

மின் விளக்குகள் எரியவில்லை

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் பல நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை. அடிக்கடி மின் வெட்டும் ஏற்படுகிறது. இரவில் விஷ உயிரினங்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே எங்கள் கிராமத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.

-த.அரவிந்தன், சோழவரம்.

புதிதாக போட்ட சாலையில் தேங்கும் மழைநீர்

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் பல கோடி ரூபாயில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் மழை பெய்யும்போதெல்லாம் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. அந்த இடத்தில் மழைநீர் வடிகாலில் செல்லவும், தார் சாலையை சற்று உயர்த்தியும் போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

குழாயில் உடைப்பு

திருப்பத்தூர் வடஅக்ரகாரம் செல்லும் வழியில் குடிநீர் வழங்கும் ஜங்ஷன் குழாயில் இருந்து தண்ணீர் தினமும் வழிந்தோடுகிறது. அதன் அருகில் குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். உடனடியாக குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து. அங்குள்ள குப்பை மூட்டைகளை அகற்ற வேண்டும். இந்தப் பகுதியில் வங்கி மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் அதிகமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிச்சாமி, திருப்பத்தூர்.


Related Tags :
Next Story