தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய தொகுப்பு.

திருப்பத்தூர்



மின்விளக்குகள் எரியுமா?

ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு ஆகியவற்றின் நடுவே உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. ரோடுகளின் இருபக்கமும் உள்ள கடைகளில் ஒளிரும் வெளிச்சத்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.

-ராகவன், ஆரணி.

குண்டும் குழியுமான தார்ச்சாலை

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூர், குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தார் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பெயர்ந்து போன தார்ச்சாலை காந்திநகர் வரை தொடர்வதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீர் செய்ய வேண்டும்.

-பாலகிருஷ்ணன், கீழ்ஆலத்தூர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

வேலூர் மாநகராட்சி சின்னஅல்லாபுரம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.

-ஆ.நவீன்குமார், சின்னஅல்லாபுரம்.

மின்கம்பத்தில் செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து கம்பத்தின் உச்சிவரை சென்றுள்ளது. கம்பத்தின் மேல் முனையில் பறவை கூடு கட்டி உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-க.தாயுமானவன், பேரணாம்பட்டு.

புதிய கழிவுநீர் கால்வாய் கட்டித்தருவார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கொடைக்கல் காலனி டேங்க் ரோடு தெருவில் 15 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் ஓடாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து புதிய கழிவுநீர் கால்வாய் கட்டித்தருவார்களா?

-பர்குணன், கொடைக்கல்.

குடிநீர் பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் ஜெராக்ஸ் கடை உள்ளது. அந்தக் கடையில் பேனா, குடிநீர் பாட்டில், குளிர்பானங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மகளிர் திட்டத்தின் மூலம் இந்தக் கடை நடத்தப்படுகிறது. அங்கு, குடிநீர் பாட்டில் உள்ளிட்டவை அதிகப்பட்ச விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஜினி, திருவண்ணாமலை.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள பெரிய சாயக்காரத் தெருவில் உள்ள பக்க கால்வாய்களை முறையாக நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கால்வாய்களை முறையாக தூர்வார ேவண்டும்.

-விஜயன், ஆரணி.


Related Tags :
Next Story