தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவு.

ராணிப்பேட்டை



கழிவுநீர் தேங்கும் அவலம்

வாலாஜா நகராட்சி 24-வது வார்டில் திருஒத்தவாடை தெரு பின்பக்கம் முத்தமிழ் நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் உயரமாக உள்ளது. எனினும், அதில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அருகில் உள்ள இடங்களில் வழிந்தோடி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் விரைந்து வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

-செந்தில்குமார், வாலாஜா.

பொது சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

ராணிப்ேபட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி 15-வது வார்டு தென்கிழனி 2-வது தெருவில் ெபாதுச்சுகாதார வளாகம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. அதைச் சுற்றி முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அங்குள்ள மக்கள் திறந்தவெளியில் கழிப்பிடம் ெசல்கிறாா்்கள். பொதுச்சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ெசயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?

-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகில் உள்ள மெய்யூரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதை சரியாக பராமரிக்காததால் சேதம் அடைந்துள்ளது. பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் நிழற்குடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?

-சிவநாதன், மெய்யூர்.

ரேஷன் கடை அமைக்க ேவண்டும்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தெள்ளூர் ஊராட்சி பெரியதெள்ளூர் பகுதியில் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். எனவே எங்கள் கிராமத்தில் புதிதாக ரேஷன்கடை அமைக்க மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணா, பெரியதெள்ளூர்.

(படம்) கழிவுநீர் கால்வாய் வசதி

பேரணாம்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தொடர்ந்து கட்டப்படாததால், அதில் செல்லும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேட்டை ஏற்பட்டுகிறது. அங்கு கழிவுநீர் கால்வாய் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

ரெயில்ேவ பாலத்தில் தேங்கும் மழைநீர்

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில்வே மேம்பால சுரங்க வழிப்பாதையில் மழைநீர் தேங்குவது வழக்கம். ஆனால், தற்போது மழைநீர் வற்றாமல் ஊற்றுபோல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அக்பர்கான், மேல்ஆலத்தூர்.

குப்பைகளை அகற்றுவார்களா?

ஆரணி ஷாரப் பஜார் அருகில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவில் தெரு, தணிகாசலம் தெரு சந்திப்பில் உள்ள பரசுராமன் தெரு மூன்று தெருக்களையும் இணைக்கும் பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை நீண்ட நாட்களாக அகற்றாமல் அப்படியே இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குப்ைபகளை அப்புறப்படுத்துவார்களா?

-ராகவன், ஆரணி.

ராஜாஜி சிலையில் உடைந்து போன ஊன்றுகோல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் மூதறிஞர் ராஜாஜியின் உருவச்சிலை உள்ளது. அந்தச் சிலையின் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோல் உடைந்து பல மாதங்கள் ஆகி விட்டது. உடைந்த ஊன்றுகோலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக்குமார், சமூக ஆர்வலர். அரக்கோணம்.


Related Tags :
Next Story