'தினத்தந்தி' செய்தி எதிரொலி:கூடலூரில் உடைந்த நடைபாதை சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி:கூடலூரில் உடைந்த நடைபாதை சீரமைப்பு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் உடைந்த நடைபாதையில் தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிப்பட்டதை தொடர்ந்து நடைபாதையை அதிகாரிகள் சீரமைத்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் உடைந்த நடைபாதையில் தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிப்பட்டதை தொடர்ந்து நடைபாதையை அதிகாரிகள் சீரமைத்தனர்.

மாணவி படுகாயம்

கூடலூர் நகரில் சாலையோரம் உள்ள நடைபாதைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் பதிக்கப்பட்ட ஓடுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலர் தடுக்கி விழுந்து காயத்துடன் செல்லும் நிலை காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் கூடலூர் கிளை நூலகத்தின் எதிரே உள்ள நடைபாதையில் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது நடைபாதையில் உள்ள துளையில் கால் இடறி உள்ளே விழுந்தார். இதில் அவரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சக மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மாணவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு பாராட்டு

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று காலை 11 மணிக்கு உடைந்த நடைபாதையில் நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து துளை ஏற்பட்ட இடத்தில் தடுப்பு கொண்டு அடைத்தனர்.

இதனால் பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, பல இடங்களில் உடைந்து காணப்படும் நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.



Next Story