கறவை மாட்டு பண்ணையாளர்கள் பயிலரங்கம்


கறவை மாட்டு பண்ணையாளர்கள் பயிலரங்கம்
x

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கறவை மாட்டு பண்ணையாளர்கள் பயிலரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கறவை மாட்டு பண்ணையாளர்கள் பயிலரங்கம் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூட்டரங்கில் நடைபெற்றது. வேலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சரஸ்வதி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கறவை மாட்டு பண்ணையாளர்களிடம் விஞ்ஞான ரீதியாக சமச்சீர் தீவனத் தொழில்நுட்பத்தின் மூலமாக பால் உற்பத்தியை அதிகப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்ககைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ் மற்றும் சென்னை நபார்டு மண்டல அலுவலக துணை பொது மேலாளர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் அவர்கள் தனுவாஸ் சமச்சீர் தீவனம் என்ற ஆண்ட்ராய்டு செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டிற்கான பிரசுரங்களை வெளியிட்டனர்.

தொடர்ந்து இந்த செயலியின் பயன்பாடு குறித்து வேலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய முதன்மை ஆராய்ச்சியாளர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய்நீஹர், திருவண்ணாமலை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், ஆவின் பொது மேலாளர் அமரவாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வாழத்துரை வழங்கினர். இதில் 120 கறவை மாட்டு பண்ணையாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் பண்ணையாளர்களுக்கு இடுபொருட்களான சமச்சீர் தீவனம், தனுவாஸ் தாதுஉப்பு கலவை, தனுவாஸ் தாது உப்பு கட்டி, வேலி மசால் விதை, தீவன சோளம் 31 விதை, அகத்தி விதை மற்றும் தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. முடிவில் திருவண்ணாமலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story