எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்


எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி    தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
x

எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியலின கிறிஸ்தவர் இடஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணையை உடனே நீக்கம் செய்ய வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், பட்டியலின கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும், இதற்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் தொடக்க உரையாற்றினார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. எழுச்சி உரையாற்றினார். ஜான்போஸ்கோ, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க பிலோமின்தாஸ், ராஜாமணி, எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு முன்னாள் தேசிய செயலாளர் தேவசகாயராஜ், மாநில செயலாளர் குழந்தைநாதன், ஆபிரகாம் ஆசைத்தம்பி, தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்க மேரிஜான், தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், தலித் கிறிஸ்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பெர்னான்டஸ், பீட்டர், ரூபிலா, பியர் அருள்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story