சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் பேரணி


சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் பேரணி
x

சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக்கோரி பேரணி நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக்கோரி பேரணி நடந்தது. போளூர் சாலையில் உள்ள தூய லூர்தன்னை திருத்தலத்திலிருந்து பேரணி புறப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி சென்றனர். பேரணி வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலை, அருகே வந்து முடிந்தது. பின்னர் காமராஜர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டத்திற்கு வேலூர் மறை மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட் தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணைத்தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலித் பணி குழு முன்னாள் செயலாளர் ஞானசேகர், வரவேற்றார். இதில் வேலூர் சி.எஸ்.ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு, கலந்துகொண்டு பல ஆண்டுகளாக போராடிவரும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

பொதுக் கூட்டத்தில் லூர்து நகர், நிர்மலா நகர், போளூர், ஆரணி, வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலூர் தலித் பணிக்குழு செயலாளர் லாரன்ஸ், செய்து இருந்தார்.


Next Story