வட்டமலை கரை ஓடை அணையில் தீபம் ஏற்றி வழிபாடு
வெள்ளகோவில் வட்டமலை கரை ஓடை அணையில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
வெள்ளகோவில் வட்டமலை கரை ஓடை அணையில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
வட்டமலை கரை ஓடை அணை
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவை கொண்டது. அணையின் மொத்த உயரம் 27 அடி. இந்த அணை மூலம் வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 40 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறுகிறது. இந்த அணைக்கு
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின்பேரில் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஷட்டரில் இருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீரை பொதுமக்கள் விவசாயிகள் மலர் தூவி, பொங்கல் வைத்து வரவேற்றனர். இதனால் வட்டமலை கரை ஓடை அணையை சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் நிலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தீபம் ஏற்றி வழிபாடு
வட்டமலை கரை ஓடை அணைக்கு நீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 4-ம் ஆண்டாக திருகார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு நேற்று மாலை வட்டமலைக்கரை ஓடை அணை நீர் வழிந்தோடும் பகுதிகளில் தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
இதனால் அணை பகுதி கோவில் திருவிழா போல் இருந்தது.