அணைக்கட்டில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம்


அணைக்கட்டில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம்
x

அணைக்கட்டில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

வேலூர்

அணைக்கட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பெண் காந்தி, மண்டல தாசில்தார் பொன் முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் வருவாய் ஆய்வாளர் ரேவதி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story