இடிந்து விழுந்த பால தடுப்புகள்
திருவாரூர் அருகே இடிந்து விழுந்த பால தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் அருகே இடிந்து விழுந்த பால தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாலம்
திருவாரூர் ஒன்றியம் மாங்குடியில் இருந்து உழனிக்கு செல்வதற்கு பாண்டவை ஆற்றை கடந்து செல்ல நடைபாலம் உள்ளது. இந்த பாலத்தை உழனி, வாஞ்சூர் பகுதி மக்கள் மாங்குடி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாங்குடி உயர்நிலை பள்ளியில் படித்து வரும் உழனி பகுதி மாணவ- மாணவிகள் நாள்தோறும் நடந்தும், சைக்கிளிலும் இந்த பாலத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
இந்த நடைபாலத்தின் இருபுறம் உள்ள தடுப்புகள் முற்றிலும் சிதைந்து, பல இடங்களில் எந்தவித தடுப்பும் இன்றி உள்ளது. ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்லும் நிலையில் ஆபத்தான நிலையில் பாலத்தை அனைவரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இந்த பாலத்தின் துண்கள் நல்ல நிலையில் உள்ளதால், பாலத்தின் சேதமடைந்த தடுப்புகளை உடனியாக சீரமைத்து தர வேண்டும். இனி வரும் நாட்கள் மழைக்காலம் என்பதால் முன்கூட்டியே பாலத்தின் சீரமைப்பு பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.