கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு


கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
x

ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் அருகே ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளரின் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று அலுவலர்கள் பணியில் இருந்தனர். மாலை 4 மணி அளவில் அலுவலர்கள் அருகிலுள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு அலுவல் சம்பந்தமாக சென்றுவிட்டனர். இந்த நேரத்தில் ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளரின் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது இந்த கட்டிடத்திற்குள் இருந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

புதிய கட்டிடம்

மக்கள் அதிகம் நடமாடக்கூடிய காலை நேரங்களில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இருந்தால் பாதிப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்றும், மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.மேலும் ஒரத்தநாடு வருவாய் ஆய்வாளரின் அலுவலகத்திற்கு போதுமான வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story